ஒடேசா (Odessa) நகர மேயரின் உக்ரைன் குடியுரிமையை ரத்து செய்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy), ரஷ்ய பாஸ்போர்ட் வைத்திருப்பதாகக் கூறி, ஒடேசா (Odessa) மேயர் ஜெனடி ட்ருகானோவின் (Gennadiy Trukhanov) உக்ரைனிய குடியுரிமையை ரத்து செய்துள்ளார்.
மேலும், மிகப்பெரிய துறைமுக நகரமான ஒடேசாவை நடத்துவதற்கு உக்ரைன் தலைவர் ஒரு இராணுவ நிர்வாகத்தை நிறுவி உளவுத்துறை ஜெனரல் செர்ஹி லைசாக்கை (Serhii Lysak) தலைவராக நியமித்துள்ளார்.
இந்த புதிய பொறுப்பை ஏற்க, செர்ஹி லைசாக், இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக வகித்து வந்த டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் (Dnipropetrovsk) பிராந்தியத்தின் இராணுவ ஆளுநர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
“ஒடேசா மேயர் ஜெனடி ட்ருகானோவின் உக்ரைனிய குடியுரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது” என்று SBU பாதுகாப்பு சேவை ஜெலென்ஸ்கி கையெழுத்திட்ட ஆணையை மேற்கோள் காட்டி உறுதிப்படுத்தியுள்ளது.