பெரிதும் பாதிக்கப்பட்ட வெலிமடை பிரதேசத்தை பார்வையிட்டார் ஜனாதிபதி
இலங்கையில் டித்வா புயலின் தாக்கத்தால் நிலச்சரிவு ஏற்பட்டு பெரிதும் பாதிக்கப்பட்ட பதுளை – வெலிமடை ரெண்டபொல பகுதியை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று பார்வையிட்டார்.
விஜயத்தின் போது, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளுடன் ஜனாதிபதி உரையாடினார்.
ஜனாதிபதியுடன் பேசியபோது, பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் துயரங்களை விளக்கினர், அதே நேரத்தில் ஜனாதிபதி அவர்களின் நலம் மற்றும் தேவையான உதவிகள் குறித்து விசாரித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிடும் ஜனாதிபதி என்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.





