வட அமெரிக்கா

$1 டிரில்லியன் பட்ஜெட் கோரிக்கையில் அதிக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ; அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் வீரர்களுக்கான சம்பளத்தை உயர்த்துவதுடன் அதிநவீன ஏவுகணைகளுக்கும் ஆளில்லா வானூர்திகளுக்கும் கூடுதல் நிதியை ஒதுக்க திட்டமிட்டுள்ளார்.அதேவேளை, கடற்படைக்கான வேலைவாய்ப்புகளைக் குறைப்பதோடு பணத்தை மிச்சப்படுத்த குறைவான போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் வாங்கும்படி அவர் பரிந்துரைத்தார்.

தற்காப்பு, தேசியப் பாதுகாப்புக்காக 2025ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க அமெரிக்கா இந்த முறை $892.6 பில்லியன் டாலரை ஒதுக்குகிறது.

டிரம்ப்பின் வரவுசெலவுத் திட்டத்தில் அணுவாயுதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கும் உள்நாட்டுப் பாதுகாப்புக்கும் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் ஆயுதங்களுக்கும் சேவைகளுக்கும் உரிய நிதியை அவர் குறைக்கிறார்.

இந்தோ – பசிபிக் வட்டாரத்தில் உள்ள சீனாவின் ஆக்கிரமிப்பைத் தடுக்கவும் தற்காப்புச் சார்ந்த தளங்களைப் புதுப்பிக்கவும் நிதி பயன்படுத்தப்படும் என்று வெள்ளை மாளிகை சொன்னது.

2026ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் திரு டிரம்ப் குறைவான F-35 ரக போர் விமானங்களுக்கும் மூன்று போர்க் கப்பல்களுக்கு மட்டுமே நிதியைப் பரிந்துரைத்தார்.வரவுசெலவுத் திட்டத்தில் வீரர்களின் சம்பளத்தை 3.8% உயர்த்தும்படி அவர் கோரிக்கை விடுத்தார்.

டிரம்ப்பின் வரவுசெலவுத் திட்டத்தின்கீழ் அமெரிக்கக் கடற்படையில் வேலை செய்யும் ராணுவப் பிரிவு அல்லாத ஊழியர்களில் கிட்டத்தட்ட 7,286 பேர் ஆட்குறைப்புச் செய்யப்படுவர்.கடந்த ஆண்டு பதவியிலிருந்த திரு ஜோ பைடன் 2025ஆம் நிதியாண்டில் 68 F-35 ரக போர் விமானங்களை வாங்க கோரிக்கை விடுத்தார். டிரம்ப் இந்த முறை அந்த எண்ணிக்கையை 47க்குக் குறைத்துள்ளார்.

டிரம்ப்பின் வரவுசெலவு குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது.தற்காப்பு அமைச்சு தொடர்ந்து வெடிமருந்துகளையும் முக்கிய ஆயுதக் கட்டமைப்புகளையும் வாங்குவதற்கு முன்னுரிமை அளிக்கிறது.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்