இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை

இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கைத்தொழில்களின் ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதி மூலம் வருடாந்தம் அதிகளவு ஏற்றுமதி வருமானத்தை ஈட்ட முடியும் என்பதால் இலக்கை அடைவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரத்தினங்கள் மற்றும் ஆபரணத் துறையின் வளர்ச்சிக்கான வரிக் கொள்கைகள் தொடர்பான பரிந்துரைகளும் “சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறை கண்காணிப்புக் குழு”வினால் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் போது, இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையை பாதிக்கும் வரிகள் மற்றும் ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதி செயன்முறைகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அத்துறையில் இதுவரை ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் உரிய தரப்பினர் ஜனாதிபதியிடம் தகவல்களை முன்வைத்தனர்.

இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் வருமானம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காணவில்லை எனவும், வருடாந்தம் குறைந்தது இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களை இலக்காகக் கொண்ட திட்டமிடப்பட்ட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இலங்கையில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண கைத்தொழில் அபிவிருத்திக்கான முறையான வேலைத்திட்டம் உடனடியாக முன்வைக்கப்பட்டால், தேவையான வசதிகள் செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.

(Visited 11 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்