செய்தி

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட ஜனாதிபதி ரணில்

இலங்கையில் 75,000 புதிய வேலைவாய்ப்புக்களும் உருவாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“டொங்ஷியா நிறுவனம் 2018 இலங்கையில் வர்த்தகச் செயற்பாடுகளை ஆரம்பித்தது. வங்குரோத்து அடைந்த பின்னரும் நாட்டிலிருந்து புதிய தொழிற்சாலையை ஆரம்பித்துள்ளது. அதனால் 400 பேருக்கு வேலைவாய்பை வழங்க முடிந்துள்ளது. இந்த தொழிற்சாலை இளையோருக்கு சிறந்த எதிர்காலத்தை தோற்றுவிக்கும். நாட்டில் இதுபோன்ற பல தொழிற்சாலைகள் உருவாக வேண்டும்.

பிங்கிரிய பிரதேசத்தை முதலீட்டு வலயமாக அபிவிருத்தி செய்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். அதற்காகவே 2018 ஆம் ஆண்டில் பிங்கிரிய பொருளாதார வலயத்தை ஆரம்பித்தோம். இன்று மேலும் 1000 ஏக்கர்களை இந்த வலயத்தோடு இணைத்திருக்கிறோம்.

நாம் மிகக் கஷ்டமான காலத்தை கடந்து வந்திருக்கிறோம். நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்த வேளையில் நாட்டை ஏற்றுக்கொள்ள எவரும் வரவில்லை. பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை கொண்டிருந்த கட்சிக்கு ஜனாதிபதி பதவியை வழங்க வேண்டிய நிலைமை வந்தது. உலகில் எங்கும் அவ்வாறு நடந்ததில்லை. இன்றளவில் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வந்திருக்கிறது.

கடன் மறுசீரமைப்பினால் மீளச் செலுத்த வேண்டியிருந்த கடன் தொகையில் 8 பில்லியன் டொலர் நிவாரணம் கிடைத்திருக்கிறது. கடன் செலுத்துவதற்கான காலத்தையும் 2043 வரையில் நீடித்துள்ளோம். அதனால் நாட்டின் பொருளாதாரம் மூச்சு விடும் நிலைமையை அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லாவிட்டால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் சரிவடையலாம். எமது ஏற்றுமதி வருமானத்தைவிட இறக்குமதி செலவு அதிகமாக உள்ளது. இவ்வாறு முன்னோக்கிச் சென்றால் இன்னும் பதினைந்து வருடங்களில் மீண்டும் வங்குரோத்து நிலைவரும்.

அதனால் வௌிநாட்டு கடன்களை முகாமைத்துவம் செய்து சிறந்த பொருளாதார முறைமையை பேண வேண்டும். வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் ஏற்றுமதி பொருளாதாரத்தினால் முன்னேறியுள்ளன. இலங்கை இன்னும் ஒரே இடத்தில் நிற்கிறது.

அதனால் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை பாதுகாத்துகொண்டு நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். ஏற்றுமதி பொருளாதாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று திறக்கப்பட்ட பொருளாதார வலயம் ஏற்றுமதி பொருளாதாரத்துக்கு சிறந்த முன்னுதாரணமாகும்.

ஏற்றுமதி பொருளாதாரம், உற்பத்தித் துறைகள், சுற்றுலா, தொழில்நுட்பம், நவீன விவசாயம் உள்ளிட்ட துறைகளின் ஊடாக வலுவான பொருளாதாரத்தை ஏற்படுத்த முடியும். அதற்குத் தேவையான அடித்தளத்தை அரசாங்கம் இட்டுள்ளது. இந்த வேலைத் திட்டங்களைப் பாதுகாப்பதால் எதிர்காலம் சிறப்பானதாக அமையும்.

ஏற்றுமதி துறையை ஊக்குவிப்பதற்கான 2018 ஆம் ஆண்டில் பிங்கிரிய ஏற்றுமதி வலயம் உருவாக்கப்பட்டது. அதனால் குளியாபிட்டிய, தும்முல்லசூரிய, மாதம்பை, பிங்கிரிய, சிலாபம் உள்ளிட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்ய முடியும். இந்த பொருளாதார வலயத்தை முழுமைப்படுத்தும் பட்சத்தில் 75,000 தொழில் வாய்ப்புக்களும் உருவாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி