சர்வஜன வாக்கெடுப்பு நடத்த ஜனாதிபதி திட்டம்
அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாகவும் அதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்த பின் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் மக்களிடம் அனுமதி கோருவதாகவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
வெள்ளவத்த அமரபுர மகா நிகாயவின் மகா தேரர்களிடம் ஆசிர்வாதம் பெற்ற பின் அவர்களுடன் நாட்டின் அரசியல் மற்றும் ஏனைய நிலைமைகள் குறித்தும் நீண்ட நேரம் உரையாடியுள்ளார்.
இங்கு ஜனாதிபதி தேர்தலில் தெரிவு செய்யப்பட்டமை குறித்து மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும அவர்கள் ஜனாதிபதி தெரிவித்தனர்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் அவரவர்களுக்கு தேவையான விதத்தில் அரசாங்கங்கள் அரசியலமைப்பை மாற்றி கொண்டனர் ஆனால் நாம் அரசியலமைப்பை திருத்தங்கள் கொண்டு வந்து மக்கள் அதனை ஆதரித்தால் மட்டுமே நடை முறைப் படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அதிகாரம் கையில் கிடைத்தாலும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இதுவரை கிடைக்கவில்லை பாராளுமன்றத் தேர்தலின் பின் இதனை விட தீவிரமாக நாட்டை முன்னெடுத்துச் செல்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.