இலங்கை: மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.
காங்கேசன்துறை பகுதியில் உள்ள மறைந்த அரசியல்வாதியின் இல்லத்திற்கு இன்று (31) பிற்பகல் ஜனாதிபதி சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். மறைந்த அரசியல்வாதியின் குடும்பத்தினருக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும் அவர் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பல அதிகாரிகள் இந்த நிகழ்வில் ஜனாதிபதியுடன் சென்றனர்.
(Visited 1 times, 1 visits today)