அவுஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவிற்கு பயணித்துள்ளார்.
இந்திய மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் நிமித்தம் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் பயணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த மாநாட்டில் இலங்கைக்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதி முக்கிய உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவுஸ்திரேலிய பிரதமர், அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 12 times, 1 visits today)