உலகம் செய்தி

இன்று இந்தியாவிற்கு வருகை தரவுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி

டெல்லியில் நாளை குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.

குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

இதற்காக அவர் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். விமானம் மூலம் இன்று மதியம் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு வரும் மேக்ரான், அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடியை சந்திக்கிறார். முன்னதாக அவர் மோடியுடன் சாலை பேரணியிலும் பங்கேற்கிறார்.

இது தவிர ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டை, ஜந்தர் மந்தர் மற்றும் ஹாவா மகால் ஆகிய இடங்களுக்கு மேக்ரான் செல்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இரவு 8.50 மணியளவில் டெல்லிக்கு புறப்பட்டு செல்லும் மேக்ரான் நாளை டெல்லி கடைமை பாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்கிறார்

(Visited 9 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!