பில்கேட்ஸுடன் கலந்துரையாடிய இலங்கை ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க COP28 இன் போது தொழிலதிபரான பில்கேட்ஸுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
உலகளாவிய சவால்கள் மற்றும் வெப்ப மண்டலப் பகுதியில் இலங்கையின் சாத்தியமான தலைமைத்துவம் குறித்து கவனம் செலுத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இதன்போது விவசாய நவீனமயமாக்கல், தரவுக் கட்டமைப்புகள் மற்றும் காலநிலை நிபுணத்துவத்துக்காக “Bill & Melinda Gates” மூலம் ஆதரவு வழங்குவதாக பில்கேட்ஸ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.
(Visited 11 times, 1 visits today)