இலங்கை ஜனாதிபதி சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம்!
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக சீன மக்கள் குடியரசிற்கான பயணத்தை ஆரம்பிப்பதற்காக சற்று முன்னர் நாட்டில் இருந்து புறப்பட்டார்.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயம் 2025 ஜனவரி 14 முதல் ஜனவரி 17 வரை நடைபெறவுள்ளது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி திஸாநாயக்க, ஜனாதிபதி ஷி ஜின்பிங், பிரதமர் லீ கியாங் மற்றும் பலருடன் உயர்மட்ட கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளார்.
சீன மூத்த அதிகாரிகள், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதையும், இரு நாடுகளுக்கு இடையே மேம்பட்ட ஒத்துழைப்பிற்கான வழிகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஜனாதிபதியுடன் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் அரசாங்கத் தகவல் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவும் சென்றுள்ளது.