பிலிப்பைன்ஸில் அவசரகால நிலையை அறிவித்த ஜனாதிபதி
இந்த ஆண்டு தாக்கிய மிகக் கொடிய இயற்கை பேரழிவிற்கு மத்தியில் பிலிப்பைன்ஸ்(Philippine) ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர்(Ferdinand Marcos Jr) நாட்டில் அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸை தாக்கிய கல்மேகி(Kalmaegi ) புயல் காரணமாக 114 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர் என்று சிவில் பாதுகாப்பு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், சூறாவளியின் தாக்குதல் கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்களை பாதித்துள்ளது மற்றும் 560,000க்கும் மேற்பட்ட மக்களை இடம்பெயர செய்துள்ளது என்று அலுவலகம் தெரிவித்துள்ளது
கல்மேகி புயல் மைக்ரோனேஷியாவின்(Micronesia) யாப்(Yap) தீவை நோக்கி நகர்கிறது. நவம்பர் 10 திங்கட்கிழமை வட-மத்திய லுசோனில்(Luzon) புயல் கரையைக் கடக்கும் என்று மதிப்பிடபட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டின் மத்திய பிராந்தியத்தில் கல்மேகியின் பேரழிவிற்கு மத்தியில், பசிபிக் பெருங்கடலில் இருந்து மற்றொரு வெப்பமண்டல சூறாவளி வலுப்பெற்று அடுத்த வார தொடக்கத்தில் வடக்கு பிலிப்பைன்ஸைத் தாக்கக்கூடும் என்று பேரிடர் மீட்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





