ஜனாதிபதி அநுரவுக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வர முடியும் – எச்சரிக்கும் பிரபலம்
ஒருமாத காலத்திலேயே இந்த அரசாங்கம் பாரதூரமான தவறிழைத்துள்ளதென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இந்த இரண்டு அறிக்கைகளை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது சகாக்களை பாதுகாக்க ஜனாதிபதி அறிக்கைகளை பகிரங்கப்படுத்தவில்லை. ஆகவே ஜனாதிபதி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
மக்களின் வரிப்பணத்தில் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கத்தை அறிந்துக் கொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு. ஜனாதிபதி நாட்டு மக்களின் சிந்திக்கும் மற்றும் தகவலறியும் உரிமைகளை மீறியுள்ளார்.
ஆகவே ஜனாதிபதி வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறியுள்ளார்.அரசியலமைப்பின் 38 ஆவது ஏற்பாடுகளை மீறியுள்ள ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணையை கொண்டு வர முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.