ஜனாதிபதி:”வரலாற்றுச் சீர்திருத்தங்களுடன் 2026-ல் கால்பதிக்கும் இலங்கை!”
ஜனாதிபதியின் புத்தாண்டு உரையில், 2025-ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கை சந்தித்த ‘டிட்வா’ (Ditwah) புயல் பாதிப்புகளில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதே 2026-ன் முதன்மை இலக்கு என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 2025-ஆம் ஆண்டு சுங்க வரி மூலம் வரலாறு காணாத வருமானம் ஈட்டப்பட்டதைச் சுட்டிக்காட்டி, 2026-ஆம் ஆண்டில் புதிய திட்டங்கள் மற்றும் உத்திகள் மூலம் இலங்கையை முழுமையான பொருளாதார வெற்றிக்கு இட்டுச் செல்லப்போவதாக உறுதியளித்தார்.
மற்றும் புயலினால் ஏற்பட்ட சுமார் 4.1 பில்லியன் டாலர் மதிப்பிலான சேதங்களைச் சரிசெய்ய சர்வதேச நாடுகளின் உதவியுடன் “நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும்” (Rebuilding Sri Lanka) திட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
இந்த 2026 ஜனவரி முதல் புதிய அரசியலமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்றும், தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் ஒரு புதிய அரசியல் கட்டமைப்பு உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இன, மத வேறுபாடு அற்ற மற்றும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து, ஒரு நேர்மையான மற்றும் ஒழுக்கமான சமூகத்தை உருவாக்க மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் 2026-ஆம் ஆண்டில் மாகாண சபைத் தேர்தல்களை (Provincial Council Elections) நடத்துவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் செய்து, புயல் பாதிப்பு நிவாரணத்திற்காக 450 மில்லியன் டாலர் நிதியுதவியை அறிவித்தார். இது 2026-ல் இலங்கை – இந்திய உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.





