மாதவிடாய்க்கு முன் முகத்தில் ஏற்படும் மாற்றங்கள் – காரணங்களும் தீர்வுகளும்
மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன் பலருக்கும் முன் அறிகுறிகள் தென்படும். இதற்கு காரணம் என்னவென்றும் , தீர்வுகளைப் பற்றியும் அமுதா சுந்தர் அக்குபஞ்சர் மற்றும் ஆல்டர்நெட் தெரபிஸ்ட் தனது யூட் யூப் பக்கத்தில் விவரித்துள்ளார்.
முகத்தில் கருமை மற்றும் முக பரு வர காரணம் ;
மாதவிடாய்க்கு முன்பு ஒரு சிலருக்கு முகத்தில் கருமை மற்றும் முகப்பருக்கள் தென்படும். இது எதனால் என்றால் மாதவிடாய் முடிந்து முதல் பத்து நாட்கள் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் சருமமானது சற்று வறண்டு இருக்கும் ,பிறகு அடுத்த பத்து நாட்கள் முட்டை வெடித்து அடுத்த மாதவிடாய்க்கு தயாராகும் காலமாகும் , இதை ஓவுலேசன் காலம் என கூறுவார்கள்.
இந்த நேரத்தில் ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜெஸ்ட்ரான் என இரண்டு ஹார்மோன்களின் அளவும் சம அளவில் இருக்கும். இதனால் கொலாஜின் என்ற புரதம் அதிகமாக சுரப்பதால் இந்தக் காலகட்டத்தில் சருமம் மினுமினுப்பாக இருக்கும். கடைசி ஏழு நாட்கள் முகம் டல்லாக காணப்படும். இது அவரவர் உடல் நிலையில் உள்ள எதிர்ப்பு சக்தியை பொறுத்து மாறுபடும் . இந்த கடைசி ஏழு நாட்கள் அல்லது பத்து நாட்கள் ப்ரொஜஸ்டானின் அளவு அதிகமாகவும் ஈஸ்ட்ரோஜனின் அளவு குறைவாகவும் காணப்படுகிறது.
இதனால் சீபம் என்ற வியர்வை சுரப்பி அதிகமாக சுரக்கும் .ஆனால் இந்த சமயத்தில் கொலாஜின் உற்பத்தி குறைவாக இருக்கும். இதனாலே முகத்தில் பருக்கள் மற்றும் கருமை தென்படுகிறது.
தீர்வுகள்;
இந்த சமயத்தில் இனிப்பு மற்றும் மைதா பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை இன்சுலின் அளவை அதிக படுத்தும் . இந்த இன்சுலின் அளவு அதிகரிக்கும் போதும் கருமை உருவாக்குகிறது. முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்ற பைட்டோ ஈஸ்ட்ரோஜனை கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
காலை நேரத்தில் புரதம் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் .இது கொலஜின் உற்பத்தியை அதிகப்படுத்தும். மாதவிடாய்க்கு 1 வாரத்திற்கு முன்பு தினமும் காலை இரண்டு முட்டை எடுத்துக் கொள்வதன் மூலம் முழு புரதம் நமக்கு கிடைத்து விடும். இதேபோல் முளைகட்டிய பாசிப்பயிறு, பண்ணீர் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.
பட்டை டீ தயாரிக்கும் முறை;
100 எம் எல் தண்ணீரில் ஒரு ஸ்பீன்ச் பட்டை தூள் சேர்த்து அந்த தண்ணீர் 50 ml வரும் வரை மிதமான தீயில் வைத்து கொதிக்க வைத்து டீயாக காலை 11 மணி அல்லது மாலை 4 மணி நேரத்தில் குடித்து வரலாம். இதன் மூலம் ஹார்மோனல் இம்பலன்ஸ் சீராக்கப்படும் . மாதவிடாய்க்கு முன்பு காப்பியை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
விதை உணவுகள்;
சூரியகாந்தி விதை மற்றும் வெள்ளை எள்ளை சம அளவு எடுத்து பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் அதாவது 5 கிராம் அளவு தினமும் உட்கொள்ள வேண்டும்.
கருமை நீக்கும் க்ரீம் தயாரிக்கும் முறை;
சோற்றுக்கற்றாழை ஜெல் 5 எம்எல் அளவு எடுத்து அதில் ரோஸ் எசன்ஸ் ஐந்து சொட்டு சேர்த்து கலந்து முகத்தில் இரவு நேரத்தில் தடவி வரலாம். இந்த ரோஸ் எசன்ஸை தனியாக எடுத்து சருமத்திற்கு பயன்படுத்தவோ நுகரவோ கூடாது.
ஆகவே மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இந்த மாறுதல்களை தெரிந்து கொண்டு அதை சரி செய்து கொண்டால் எப்பொழுதுமே நமது சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.