கனடாவில் சக பணியாளர்களின் செயலால் நெகிழ்ச்சியடைந்த கர்ப்பிணி
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அவரது பணியிடத்தைச் சேர்ந்த ஏனைய இளையவர்கள் உதவிய விதம் பாராட்டப்பட்டு வருகின்றது.
லிசா ஆம்ஸ்ட்ரோங் என்ற பெண்ணை சக பணியாளர்கள் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.வான்கூவார் தீவுகளில் ரெஸ்டுரன்ட் ஒன்றில் பணியாற்றி வரும் குறித்த பெண்ணுக்கு சகல பணியாளர்கள் தங்களது சம்பளத்தை வழங்கியுள்ளனர்.
குடும்பத்தின் பிரதான வருமானமீட்டும் நபர் என்ற வகையில் லீசாவினால் மகப்பேற்றுக் காலத்தில் கூடுதல் விடுமுறை எடுக்க முடியாத சூழ்நிலை காணப்பட்டது.மகபபேற்றின் பின்னர் இரண்டு வாரங்களில் பணிக்கு திரும்ப திட்டமிட்டிருந்தார்.எனினும், குழந்தை இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே பிறந்த காரணத்தினால் குழந்தையை மருத்துவமனையில் வைத்து பராமரிக்க நேரிட்டது.
இதனால் பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கிய லீசாவிற்கு, அவரது சக பணியாளர்கள் தங்களது சம்பளத்தை திரட்டி கொடுத்துள்ளனர்.இதன் மூலம் தம்மால் அதிக எண்ணிக்கையிலான நாட்கள் விடுமுறையில் இருக்க முடிவதாக தெரிவித்துள்ளார்.
15 முதல் 17 வயதான இளையவர்கள் தங்களது சம்பளத்தை நன்கொடையாக வழங்கி லீசாவிற்கு உதவியுள்ளனர்.