கிழக்கு ஆப்கானிஸ்தானில் 12 மணி நேரத்திற்குள் புதிதாக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்!

கிழக்கு ஆப்கானிஸ்தானில் 12 மணி நேரத்திற்குள் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 2200 பேர் உயிரிழந்துள்ள நிலையில் புதிய நிலநடுக்கம் மேலும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற நிறுவனங்கள் நிதி, உணவு, மருத்துவப் பொருட்கள் மற்றும் தங்குமிடம் ஆகியவற்றின் முக்கிய தேவை குறித்து எச்சரித்துள்ளதால், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து தப்பியவர்கள் அடிப்படை வசதிகளுக்காகத் தவிக்கின்றனர்.
நங்கர்ஹார் மாகாணத்தில் தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும், சேத விவரங்கள் இன்னும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் ராய்ட்டர்ஸ் சாட்சி ஒருவர் தெரிவித்தார்.
(Visited 1 times, 1 visits today)