கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தென் அமெரிக்காவின் கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
6.3 ரிக்டர் அளவுகோலில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பொகோட்டாவில் இருந்து தென்கிழக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உயரமான கட்டிடங்களில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்ததை காணக்கூடியதாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.





