தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 15 பேர் படுகாயம், இழப்புகள் குறித்து மதிப்பாய்வு!
தெற்கு தைவானில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, இதனால் 15 பேர் லேசான காயங்களுக்கு உள்ளாகினர்.
உள்ளூர் நேரப்படி (திங்கட்கிழமை 1600 GMT) அதிகாலை 12:17 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தைவானின் மத்திய வானிலை நிர்வாகம் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைப் பதிவு செய்தது.
நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை, இருப்பினும் மீட்புப் பணியாளர்கள் இன்னும் சேதத்தை மதிப்பிடுகின்றனர்
தைவானின் தீயணைப்புத் துறை, 15 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
அவர்களில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் அடங்குவர், அவர்கள் தைனான் நகரின் நான்சி மாவட்டத்தில் இடிந்து விழுந்த வீட்டில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.