ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் 5.9 ஆகப் பதிவு

ஜப்பானை இன்று (ஜீன்3) சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது.இவ் நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.9ஆகப் பதிவானது.
இருப்பினும், சுனாமி அபாயம் இல்லை என்று ஜப்பானிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டு 10 நிமிடங்களில் அதே இடத்தில் இன்னொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 4.8ஆகப் பதிவானது.
ஜப்பானின் நோட்டோ தீபகற்பம் நிலநடுக்கத்தின் மையப் பகுதியாக இருந்தது.
நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் சேகரித்து வருவதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜனவரி 1ஆம் திகதி நோட்டோ தீபகற்பத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது 230க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
(Visited 25 times, 1 visits today)