கிரேக்கத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இஸ்ரேல், லெபனான், துருக்கியிலும் உணரப்பட்ட அதிர்வு
கிரேக்கத்தில் இன்று அதிகாலை 1 மணியளவில், பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கிரேக்கத்தின் ப்ரை பகுதியில், 6.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எகிப்தின் தலைநகர் கெய்ரோவிலும், இஸ்ரேல், லெபனான், துருக்கி மற்றும் ஜோர்தானிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
அந்நாட்டு நேரப்படி புதன்கிழமை அதிகாலை 1:51 குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 78 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் சொத்துக்களுக்கோ அல்லது உயிர்களுக்கோ எவ்வித சேதங்களும் ஏற்பட்டதாக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.





