ஆசியா

தைவானில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ஜப்பானுக்கும் எச்சரிக்கை!

தைவானின் கிழக்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். குறித்த நிலநடுக்கத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐந்து மாடி கட்டடம் ஒன்று 45 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் பல வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சுனாமியின் முதல் அலை ஜப்பானின் இரண்டு தெற்கு தீவுகளைத் தாக்கியது மற்றும் மூன்று மீட்டர் வரை அலைகள் தென்மேற்கு கடற்கரையின் பெரிய பகுதிகளை அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக முன்னுரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!