பிரித்தானியாவில் 140,000இற்கும் அதிகமானவர்களுக்கு மின் துண்டிப்பு : இருவர் பலி!
பிரித்தானியாவில் தாராக் புயல் நிலைமை காரணமாக பலத்த காற்று வீசிவருகின்றது. இந்நிலையில் மரங்கள் வாகனங்கள் மீது விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்காஷயரில் உள்ள லாங்டன் அருகே 40 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் பர்மிங்காம் பகுதியில் நபர் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
தர்ராக் புயலால் பிரிட்டன் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால், 140,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரத்தை இழந்து தவிப்பதாக கூறப்படுகிறது.
(Visited 6 times, 1 visits today)