பதுளை பொதுவைத்தியசாலையில் மின்சாரம் துண்டிப்பு!

பதுளை பொது வைத்தியசாலையின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையின் மின்சார கட்டணம் 7 கோடி ரூபாவை அண்மித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக நேற்று (09.08) தாதியர் பயிற்சிப் பிரிவு, மருத்துவக் குடியிருப்பு, தாதியர் விடுதி ஆகியவற்றில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் காலங்களில் வைத்தியசாலைக்கு முழுமையாக மின்சாரம் தடைப்படும் அபாயம் உள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)