இலங்கையில் மீண்டும் மின்தடை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாட்டில் மின் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மறுசீரமைப்பு என்ற போர்வையில் இலங்கை மின்சார சபையை விற்பனை செய்யத் தயாராகும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அனைத்து ஊழியர்களையும் நாளைய தினம் கொழும்புக்கு அழைக்க தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.
எனவே, நாளை அனைத்து வேலைத்தளங்களினதும் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
(Visited 22 times, 1 visits today)





