கனடாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் : அரசாங்கம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கனடா தபால் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் அண்மையில் வேலை நிறுத்தங்களை முன்னெடுத்திருந்த நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை தற்காலிகமாக பணிநீக்கம் செய்வதாக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் அந்த தற்காலிக பணிநீக்கம் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (11.12) இரவு வெளியிடப்பட்ட அறிக்கையில், மத்தியஸ்த தீர்வு எட்டப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அவர்கள் தற்காலிக பணிநீக்கத்தில் இல்லை என்பதை கனடா போஸ்ட் அறிவிக்க வேண்டும் என்றும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், கனடா போஸ்ட் தீர்மானத்தின் விதிமுறைகளின் கீழ், தேவைப்பட்டால் எதிர்காலத்தில் பணியாளர்களை மாற்றுவதற்கான உரிமையை கொண்டுள்ளது என்று கூறுகிறது.
55,000க்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தம் நான்கு வாரங்களை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.