அமெரிக்க அரசாங்கம் முடக்கப்படும் சாத்தியம் குறைவு – தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்
சர்வதேச சந்தையின் தங்கத்தின் விலை முதன் முறையாக 3,000 டொலரை தாண்டியுள்ளது.
பங்குச் சந்தையில் நேற்று சிறிது நேரத்திற்குத் தங்கத்தின் விலை அவுன்ஸிற்கு 3,004 டொலரை எட்டியது. பிறகு 3,000 டொலருக்குக் குறைந்தது.
அமெரிக்க அரசாங்கம் முடக்கப்படும் சாத்தியம் குறைவாக இருப்பதற்குரிய அறிகுறிகள் உருவானதால் அமெரிக்க பங்குகளின் விலைகள் உயர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அரசாங்கச் செலவு குறித்த குடியரசுக் கட்சியின் மசோதாவிற்கு ஜனநாயகக் கட்சி முன்னதாக எதிர்ப்புத் தெரிவித்துவந்தது. அதன் காரணமாக அரசாங்கம் முடக்கப்படலாம் என்ற அச்சம் உருவானது.
ஆனால் ஜனநாயகக் கட்சியின் செனட் சபைத் தலைவர் சக் ஷுமர் அந்த மசோதவிற்கான எதிர்ப்பைக் கைவிட்டதாகக் கூறப்படுகிறது.





