பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரித்த போர்ச்சுகல்

போர்ச்சுகல், பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பாலோ ரேஞ்சல் நியூயார்க்கில் அறிவித்துள்ளார்.
“நீதியான மற்றும் நீடித்த அமைதிக்கான ஒரே பாதையாக போர்ச்சுகல் இரு நாடு தீர்வை ஆதரிக்கிறது, போர்நிறுத்தம் அவசரமானது” என்று வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஹமாஸ் கைப்பிடியில் உள்ள அணைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க பாலோ ரேஞ்சல் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று பாலஸ்தீன அரசை அங்கீகரித்த பிரித்தானியா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் போர்ச்சுகல் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
(Visited 7 times, 1 visits today)