உக்ரைன், ரஷ்யா ஒப்பந்தம் உருவாக நேரடி பேச்சுவார்த்தைகள் தேவை – போப்பின் கிறிஸ்துமஸ் உரை
உக்ரைனும் ரஷ்யாவும் போரைக் நிறுத்த நேரடி பேச்சுவார்த்தைகள் நடத்த தைரியமாக இருக்க வேண்டும் என போப் லியோ (Leo) தெரிவித்துள்ளார்.
செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் தனது முதல் கிறிஸ்துமஸ் உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்தின் ஆதரவும் ஒத்துழைப்பும் இருந்தால் நேர்மையான, மரியாதையுள்ள உரையாடலை இரு நாடுகளும் மேற்கொள்ள முடியும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அமெரிக்கா தலைமையிலான பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே இரு தரப்புக்கும் ஏற்ற ஒப்பந்தத்தை உருவாக்க அமெரிக்க முயற்சிக்கிறது.
ஆனால் இந்த அண்மைய முயற்சிகளில் போரிடும் தரப்பினரிடையே நேரடி பேச்சுவார்த்தைகள் இன்னும் நடைபெறவில்லை.
இதேவேளை போப் லியோ, உலகின் வேறு பகுதிகளில் இடம்பெறும் போர் நடவடிக்கைகளுக்கும் கண்டனம் வெளியிட்டார்.
உலகெங்கிலும் வீடு இல்லாத மக்கள் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையையும் போப் எடுத்துரைத்தார்.
ஜூலை மாதத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்ட போதிலும், தாய்லாந்து மற்றும் கம்போடியாவில் தீவிர எல்லை மோதல்கள் இடம்பெறுகின்றன.
இந்நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் “பண்டைய நட்பு” மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு சமரசம் மற்றும் அமைதி அடைய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.





