பாப்பரசர் லியோ இலங்கைக்கு வர வாய்ப்பு – வத்திக்கான் உயர் தூதுவர் தகவல்
பாப்பரசர் லியோ இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்குரிய சாத்தியம் இருப்பதாக தெரியவருகின்றது. வத்திக்கான் உயர் தூதுவர் ஒருவரை மேற்கோள்காட்டி கத்தோலிக்க செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கும், வத்திக்கானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் 50 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளன. இதனையொட்டி வத்திக்கான வெளிவிவகார அமைச்சர் போல் ரிச்சர்ட் கல்லாகர், கடந்த 3ஆம் திகதி கொழும்புக்கு பயணம் மேற்கொண்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து பேச்சு நடத்தியபோது, அமைதி மற்றும் உறுதித்தன்மையை நோக்கிய, இலங்கையின் முன்னேற்றத்தை அங்கீகரிக்கும் வகையில், பாப்பரசர் லியோ இலங்கைக்கு வருகை தரக் கூடும் என குறிப்பிட்டிருந்தார்.
மத மற்றும் இனக்குழுக்களிடையே அமைதி மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதில் இலங்கையின் முன்னேற்றத்தை பாப்பரசர் வரவேற்றுள்ளார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவர் கொழும்பு வரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.





