போப் பிரான்சிஸிஸ் மீண்டும் பேசுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் அபாயம்
கத்தோலிக்கச் சமயத் தலைவரான போப் பிரான்சிஸிஸ் பேசுவதை மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அவரது உடல்நிலை சற்று மேம்பட்டுள்ள போதிலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக வத்திகான் தெரிவித்துள்ளது.
நிமோனியா மூச்சுத் திணறல் காரணமாக அவதியுற்று கடந்த 5 வாரங்களாகப் போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்குப் பிராண வாயுச் சிகிச்சை அளிக்கப்பட்டதால், பேசுவதை மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்று வத்திகன் பேச்சாளர் கூறினார்.
போப் பிரான்ஸ் வயது 88 ஆகும். அவர் பொறுப்பிலிருந்து ஓய்வுபெறவிருப்பதாகக் கூறப்படுவதை அவரது ஆலோசகர்கள் மறுத்தனர்.





