ஐரோப்பா

புனித பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு அறிவிக்கப்படாத விஜயத்தை மேற்கொண்ட போப் பிரான்ஸிஸ்!

ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு பிரார்த்தனை செய்வதற்கும், அங்கு கூடியிருந்த விசுவாசிகளில் சிலரை வாழ்த்துவதற்கும் போப் பிரான்சிஸ் சனிக்கிழமை புனித பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு ஒரு குறுகிய மற்றும் அறிவிக்கப்படாத விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

88 வயதான போப்பாண்டவர் சக்கர நாற்காலியில் தனது செவிலியருடன் முன்னிலையாகியிருந்தார். சுமார் கால் மணி நேரம் புனித பீட்டர் கல்லறையில் பிரார்த்தனை செய்ய நின்றதாக இத்தாலிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.

போப் தனது இல்லத்திற்குத் திரும்புவதற்கு முன்பு அங்கு கூடியிருந்தவர்களை வரவேற்றார்.

புனித வாரத்தின் போது போப்பின் சமீபத்திய பொதுத் தோற்றம் இதுவாகும். இதேவேளை கடந்த வியாழக்கிழமை ரோமில் உள்ள ஒரு சிறையில் சுமார் 70 கைதிகளைச் சந்தித்தார்.

மேலும் குருத்தோலை ஞாயிற்றுக்கிழமை புனித பீட்டர் சதுக்கத்தில் நடந்த ஒரு திருப்பலியிலும் போப் தோன்றி, வழிபாட்டிற்காகக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களை வாழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!