போப் பிரான்சிஸிற்கு மீண்டும் சுவாசப் பிரச்சினை – மக்கள் பிரார்த்தனை

போப் பிரான்சிஸ் மீண்டும் உயிர்வாயு மூச்சுக் கவசத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதாக வத்திகன் தெரிவித்திருக்கிறது.
நேற்று இரண்டு முறை கடுமையான சுவாசப் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு மூச்சுக் கவசம் வழங்கப்பட்டுள்ளது.
சிகிச்சையின்போது போப் விழிப்போடும் ஒருமித்த கவனத்தோடும் இருந்ததாகக் கூறிய வத்திகன் அவர் நன்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவித்தது.
நுரையீரல்கள் ரத்தத்துக்குப் போதுமான உயிர்வாயுவை அனுப்ப முடியாவிட்டால் அல்லது உடலில் மிதமிஞ்சிய கரியமில வாயு இருந்தால் கடுமையான சுவாசப் பிரச்சினை ஏற்படுகிறது.
போப் பிரான்சிஸ் குணமடைவதில் இது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நிமோனியா காய்ச்சலை எதிர்த்து அவர் 2 வாரத்துக்கு மேலாகப் போராடுகிறார்.
அவர் குணமடையப் பிரார்த்திப்பதற்கு உலகம் முழுவதுமிருந்து பலரும் ரோம் நகருக்குச் செல்கின்றனர்.