கங்கை நீர் குறித்து எச்சரிக்கை விடுத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
உத்தரகாண்ட் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஒவ்வொரு மாதமும் உத்தர பிரதேச எல்லை அருகே ஹரித்துவாரைச் சுற்றியுள்ள 8 இடங்களில் கங்கை நீர் பரிசோதனை செய்யப்படுகிறது.
அதன்படி நதி நீர் A முதல் E வரை 5 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
A என்பது மிக குறைந்த நச்சுத்தன்மை கொண்டது. அந்த தண்ணீரை கிருமி நீக்கம் செய்த பிறகு குடிநீராக பயன்படுத்தலாம்.
அதே சமயம் E என்றால் அதிக நச்சுத்தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நவம்பர் மாதத்திற்கான சமீபத்திய சோதனையில் கங்கை நதி நீர் B வகையாக இருப்பது கண்டறியப்பட்டது.
இதன் மூலம் ஹரித்துவாரில் கங்கை நதி குடிப்பதற்கு உகந்தது அல்ல என தெரிய வந்துள்ளது. அதே சமயம், அந்த நீர் குளிப்பதற்கு ஏற்றது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)