இலங்கை

இலங்கையில் ஆளுங்கட்சி மீது அரசியல் போர்: வருகிறது மற்றுமொரு பிரேரணை!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் தொலவத்த வலியுறுத்தியுள்ளார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிடமே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக சுட்டிக்காட்டி, உரிய பாதுகாப்புகோரி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் எழுதி இருந்தார். எனினும், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இந்த விடயத்தை பிரதானக் காரணமாகக் கொண்டே மேற்படி நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட வேண்டும் எனவும் பிரேம்நாத் தொலவத்த சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தமது நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்கவில்லை.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றுவதற்குரிய பெரும்பான்மைபலம் எதிர்க்கட்சிவசம் இல்லாதபோதும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்மீது நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்தவும், நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை சுட்டிக்காட்டவும் இப்பிரேரணையை ஒரு கருவியாக பயன்படுத்தலாம் என சில எதிரணி உறுப்பினர்கள் கருதுகின்றனர்.

அதேவேளை, சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுப்பதற்குரிய நகர்வுகளை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கனவே ஆரம்பித்திருந்தமை தெரிந்ததே.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!