இலங்கை

கிழக்கு மாகாணத்தில் கல்வி நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகள்!

கிழக்கு மாகாணத்தில் கல்வி நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்துவருவதாக இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்ராலின் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று (18.120 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “தற்போது நாம் காண்கின்றோம் கிழக்கு மாகாணத்தில் கல்வி சம்பந்தமாக அரசியல் தலையீடுகள் வர வர அதிகரித்துக் கொண்டு செல்கின்றது விசேஷமாக பாடசாலைகளில் அதிபர்கள் நியமனங்களில் பிரச்சினை நிலவுவதை  நாங்கள் காண்கின்றோம்.

பாடசாலைகளில் அதிபர்களை நியமிக்கிறதான 93 28 சுற்றறிக்கை அதன்படி பாடசாலைகளில் அதிபர்கள் வெற்றிடம் வந்தால் அது தொடர்பாக முறையாக விண்ணப்பங்கள் கூறப்பட்டு அதற்கான நேர்முகத் தேர்வு வைக்கப்பட்டு முறையாக தேர்வு செய்ய வேண்டும் அவ்வாறு இல்லாமல் சில பாடசாலைகளில் அதிபர் நியமனம் வழங்கிக் கொண்டு செல்கின்றார்கள் இது ஒரு பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.

இதில் ஒரு கட்சி மாத்திரமல்ல பல கட்சிகள் செயல்படுகின்ற இந்த கிழக்கு மாகாணத்தில் ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கும் தேவையான மாதிரி அவர்களுடைய பிரதேசங்களில் அதிபர் நியமனங்களில் கையிடுவதை நாங்கள் அதிகளவாக காண்கின்றோம் விசேடமாக தேசிய பாடசாலைகளிலும் இந்த விடயங்கள் நடப்பதை நாங்கள் காண்கின்றோம்.

கல்வி அமைச்சுக்கு சென்று அழுத்தங்களை கொடுத்து அவர்களுக்கு தேவையான அதிபர்களை கொண்டு வந்து பாடசாலைகளுக்கு வைக்கின்றார்கள்.  இந்த நிலையில் அதிபர்கள் நியமனத்திற்கான முறைகளுக்கு என்ன நடக்கின்றது அதனால் முறையாக பாடசாலைகளுக்கு அதிபர் வெற்றிடங்களுக்கு செல்ல இருக்கின்றவர்களுக்கு பாரிய பிரச்சினைகளாக மாறுகின்றது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டிய செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

அத்தோடு தற்போது அதிபர் நியமனம் இலங்கை அதிபர் சேவை தரம் 3 நியமனங்கள் 4672 கொடுக்கப்பட்டிருக்கின்றது அதில் கிழக்கு மாகாணத்திற்கு 487 பேர் நியமித்துள்ளனர் வடமகாணத்திற்கு 259 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது பரீட்சைகளில் மூலம் வந்த நியமனம்.

இந்த நியமனம் வந்து அவர்களுக்கு உரிய பாடசாலைகள் வழங்கும் போது இதில் கூட முறையான செயற்பாடுகள் இல்லை.   தேசிய பாடசாலை நியமனம் வழங்கும்போது ஒரு மாதிரியும் மாகாண சபைக்கு நியமனம் வழங்கும்போது இன்னும் ஒரு மாதிரியும் இடம்பெறுகிறது.  இதில் அரசியல் தலையீடுகள் மூலம் நியமனங்கள் வழங்குவது முறையா?

விசேஷமாக 486 நியமனங்கள் சம்பந்தமாக கிழக்கு மாகாணத்தில் முறையான ஒரு செயல் திட்டம் அவசியம்.  அதைப்போல வடமாகணத்திலும் இந்த செயல் திட்டம் அவசியம்.  இந்த செயல் திட்டம் கல்வி அமைச்சினால் செய்யவில்லை.

அத்தோடு கல்வி தொடர்பாக சமமான செயற்பாடு அவசியம் பாடசாலைகளில் வளங்கள் வழங்குவதில் பாடசாலைகளுக்கு கட்டிடங்கள் வழங்குவது தொடர்பான செயல்பாடுகளில் இவற்றில் கூட அரசியல்வாதிகள் பின் சென்று இதில் செயல்படுவதனால் ஒன்றும் நடக்கப் போவதில்லை.  சில பாடசாலைகளில் மழையின் காரணமாக தண்ணீர் உள்ளது அதிகரித்துள்ளது பாடசாலைகளை கொண்டு நடத்துவதில் சிரமம் உள்ளது.

மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர் ஒரு பக்கத்தினால் கல்வி தொடர்பாக கட்டணங்கள் அதிகரித்து இருக்கின்றது.  பாடசாலைகளில் எல்லா செயல்பாடுகளும் பெற்றோர்கள் மத்தியிலே சுமத்தப்பட்டிருக்கின்றது.  பெற்றோர்களிடம் பணத்தினை அறவிட்டு அனைத்தையும் செய்கின்றார்கள் மக்களுக்கு வாழ இயலாத சூழ்நிலை ஒரு பக்கம் காணப்படுகின்றது.

இலவச கல்விக்கு பணம் செலுத்தும் செயற்பாடு வந்துள்ளது. இதற்கிடையில் வட் வரி அதிகரிக்கப்போகிறது. இவ்வாறு அதிகரித்தால் மக்கள் எவ்வாறு வாழ்வது” எனத் தெரிவித்துள்ளார்.

 

(Visited 1 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content