இலங்கை – பாணந்துறை கடற்பகுதியில் நீராடச்சென்ற போலந்து பிரஜை உயிரிழப்பு!
பாணந்துறை கடற் பகுதியில் நீராடச் சென்ற போலந்து நாட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் 61 வயதுடைய போலந்து நாட்டு பிரஜை ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை – தெற்கு பொலிஸ் பிரிவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவர், பாணந்துறை கடற்கரைக்கு நீராடச் சென்றுள்ளார்.
இதன்போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட அவர், உயிர் காக்கும் பிரிவினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 15 times, 1 visits today)





