ஐரோப்பா

பிரித்தானிய உள்துறைச் செயலர் சுவெல்லாவுக்கு பொலிஸார் எச்சரிக்கை கடிதம்..!

குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில் நடைபெறும் ஒவ்வொரு திருட்டையும் பொலிஸார் விசாரணை செய்தாகவேண்டும் என பிரித்தானிய உள்துறைச் செயலர் அறிவித்திருந்தார்.

பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன், கடைகளில் திருடுவது, சேதப்படுத்துவது, மொபைல் திருட்டு அல்லது கார் திருட்டு ஆகிய குற்றச்செயல்களை பொலிசார் முக்கியத்துவம் குறைந்தவையாக கருதுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று கூறியிருந்தார்.ஆகவே, குற்றச்செயல் எத்தகையதாயினும் அது குறித்து பொலிர் விசாரணை செய்தாகவேண்டும் என சுவெல்லா அறிவித்திருந்தார்.

சுவெல்லாவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது. தேசிய பொலிஸ் துறைத் தலைவர்கள் கவுன்சிலின் (NPCC) தலைவரான Gavin Stephens, அந்த அறிவிப்பு தொடர்பில் சுவெல்லாவுக்கும், பொலிஸ் துறை அமைச்சரான Chris Philpக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள அந்த கடிதத்தில், பொலிஸ் துறைக்கு அழுத்தம் கொடுப்பது, மொத்தத்தில் குற்றவியல் நீதி அமைப்பின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இணைந்து செயல்படவேண்டிய வியங்கள் பல உள்ளன என்றும் எச்சரித்துள்ளார் அவர்.

இன்னும் பொலிஸ் துறையில் பெருமளவில் பொலிஸார் பற்றாக்குறை உள்ளதாக தெரிவித்துள்ள Gavin, ஆகவே, சுதந்திரமாக செயல்பட பொலிஸ் துறைத் தலைவர்களை அனுமதிப்பதும் எந்த குற்றச்செயல்களுக்கு முன்னுரிமை கொடுப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் பொறுப்பை அவர்களிடமே விடுவதும் சரியே என்று கூறியுள்ளார்.

(Visited 14 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்