சிங்கப்பூரில் WhatsApp Web தளத்தைப் பயன்படுத்துவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை!
சிங்கப்பூரில் WhatsApp Web தளத்தைப் பயன்படுத்த வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருந்தால், அது அதிகாரத்துவ இணையப்பக்கம் தானா என்பதை உறுதி செய்யுமாறு அது வலியுறுத்தியது.
WhatsApp Webஐப் பாவனை செய்யும் இணையப்பக்க மோசடிகள் குறித்து நினைவூட்டிய பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். போலிப் பக்கத்தில் வரும் QR குறியீட்டை ஸ்கேன் செய்யும்போது Whatsapp கணக்கு ஊடுருவப்படுகிறது.
அந்தக் கணக்கின் மூலம் ஒருவரின் உற்றார் உறவினரை மோசடிக்காரர்கள் தொடர்புகொண்டு நிதியுதவி கேட்கின்றனர். மோசடி என்பதை அறியாத உற்றார் உறவினர் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்குப் பணம் மாற்றுகின்றனர்.
WhatsApp கணக்கின் உரிமையாளர் தாம் நிதியுதவி கேட்கவில்லை என்று கூறும்போது உண்மை தெரியவருகிறது. WhatsApp-இல் வரும் வழக்கத்திற்கு மாறான கோரிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.