ஆப்பிரிக்கா

துனிசியாவில் ஜெப ஆலயத்தில் தீக் குளித்த நபரை சுட்டுக் கொன்ற பொலிஸார்!

துனிசிய தலைநகரில் உள்ள கிராண்ட் ஜெப ஆலயத்தின் முன் ஒருவர் தீக்குளித்த நபர் ஒருவர் மீது பொலிஸார் துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டனர். இதில் அந்த நபர் உயிரிழந்துள்ளார்.

ஜெப ஆலயத்தில் சப்பாத் தொழுகைகள் நடைபெறும் நேரத்தில், அந்த நபர் தீ மூட்டிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பொலிஸ் அதிகாரி ஒருவரும் வழிப்போக்கரும் தீக்காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த நபர் தீயில் எரிந்து கொண்டிருக்கும் போது ஒரு சட்ட அமலாக்க அதிகாரியை நோக்கி முன்னேறியதாகவும், இரண்டாவது அதிகாரி தனது சக ஊழியரைப் பாதுகாக்க துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த நபரின் அடையாளத்தையோ அல்லது அவரது செயலுக்கான சாத்தியமான நோக்கத்தையோ அமைச்சகம் வெளியிடவில்லை, அவருக்கு குறிப்பிடப்படாத மனநல கோளாறுகள் இருப்பதாக மட்டுமே கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு