ஐரோப்பா

ஜெர்மனியில் வீதியில் கண்டெடுக்கப்பட்ட பச்சிளங்குழந்தை – தாயாரை தேடும் பொலிஸார்

ஜெர்மனியில் நகரத்தில் பச்சிளங்குழந்தை ஒன்று வீதியில் கண்டு எடுக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது அந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றது.

குழந்தையை தாய் மற்றும் வேறு ஒரு ஆண் நடு வீதியில் வைத்து விட்டு சென்றதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த வீதியில் சென்ற ஒரு சில நபர்கள் சில அடையாளங்களை கண்டுப்பிடித்த நிலையில் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனடிப்படையில் குறித்த குழந்தையை காப்பாற்றி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டாக தெரியவந்துள்ளது. வைத்தியசாலையில் இந்த குழந்தையின் முன்னேற்றம் மிகவும் வெற்றிகரமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்து இருக்கின்றார்கள்.

குறித்தகுழந்தையின் தாயாரை கண்டுப்பிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரம் காட்டி வருவதாகவும், மேலும் குழந்தையை சுற்றி வைக்கப்பட்ட துணியில் துருக்கி எழுத்தில் எழுதப்பட்ட வாசகங்கள் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பொலிஸார் கண்டெடுத்த இந்த துணியை பிரசுரித்து பொதுமக்களின் உதவியை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!