இம்ரான் கான் வீட்டில் பொலிஸார் அதிரடி சோதனை; சிக்கிய 6 பயங்கரவாதிகள்!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் அங்கு சோதனை நடத்தினர்.
அண்மையில், இம்ரான் கான் வீட்டில் 40 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், அவர்களை 24 மணி நேரத்திற்குள் ஒப்படைக்கும்படியும் அவரது கட்சிக்கு, பொலிஸார் அறிவுறுத்தினர்.
இந்நிலையில், வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து, லாகூரிலுள்ள இம்ரான் வீட்டில், அதிரடியாக உள்ளே நுழைந்து பொலிஸார் சோதனை நடத்தினர்.அப்போது வீட்டின் முன்பக்க மற்றும் பின்பக்க வாயில் என அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
இதன் போது இம்ரான் கான் வீட்டிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற 6 பயங்கரவாதிகளை கைது செய்ததாக, லாகூர் காவல் துறை தெரிவித்துள்ளது.
(Visited 14 times, 1 visits today)