ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிகளுடன் ரோந்து செல்லும் பொலிஸார் : மக்களுக்கு அழைப்பு!
ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் இடம்பெற்ற கொடிய தாக்குதலை தொடர்ந்து புத்தாண்டை கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸின் (NSW) பிரதமர் கிறிஸ் மின்ஸ் (Chris Minns), பயங்கரவாதிகளின் மூக்கை உடைக்க, டிசம்பர் 31 வாணவேடிக்கை மற்றும் பிற நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அன்றைய தினம் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பெருமளவான காவல்துறையினர் குவிக்கப்படுவார்கள் எனவும், பொதுமக்கள் இதற்கு முன்பு பார்த்திராத ஆயுதங்களுடன் அவர்கள் ரோந்து செல்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“புத்தாண்டு காலத்தில் வெளியே சென்று குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் நேரத்தை செலவிடுவதன் மூலம் நாம் எதிர்ப்பைக் காட்ட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
யாரேனும் பயங்கரவாதிகள் கூட்டத்தில் கலந்திருந்தாலோ அல்லது தாக்குதல் நடத்தினாலோ காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்துவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி போண்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மேற்படி அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





