இலங்கை செய்தி

கஞ்சா சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட்

பொலிஸ் போக்குவரத்து சோதனையின் போது போதைப்பொருள் பார்சலை காருக்குள் வைத்து இளைஞர்கள் குழுவை கைது செய்ய முயன்றதாக சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில் உள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தரவிற்கு அமைய, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர் என்பதுடன் அவரும் மற்றுமொரு அதிகாரிகள் குழுவும் ஆனந்த குமார சுவாமிக்கும் கேணல் டி.ஜெயா மாவத்தைக்கும் இடைப்பட்ட பகுதியில் கடமைகளில் ஈடுபட்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பந்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள், காரில் கஞ்சா போதைப்பொருளை வைத்து சோதனையிடப்பட்டு அந்த காரில் வந்தவர்களை கைது செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை காரில் வந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பொலிஸ் கான்ஸ்டபிள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதன்படி, உத்தியோகபூர்வ ஆடைகளை அணிந்து வெற்றிலை பாக்கு உண்டமை, சாரதி அல்லது வாகனத்தில் பயணிக்காத வேறு நபர் மற்றும் உதவி உத்தியோகத்தர் இல்லாமல் வாகனத்தை சோதனை செய்தமை போன்ற பல குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 6 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!