இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

பிரித்தானியாவில் காதலிப்பவர்களுக்கு பொலிஸாரின் அவசர எச்சரிக்கை!

பிரித்தானியாவில் ஒன்லைன் மோசடிகளால் ஆண்டுக்கு 106 மில்லியன் பவுண்ட்ஸிற்கும் அதிமான தொகை இழக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒன்லைன் மோசடிகள் மூலம் பாதிக்கப்படுபவர்களை பாதுகாக்க இன்னும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக காதல் மோசடிகள் மோசமடைந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தனிமையில் இருப்பவர்களை முதலில் காதல் வலையில் வீழ்த்தும் மர்ம நபர்கள் பின்னர் அவர்களின் நம்பிக்கையை பெற்றுக்கொண்டு மெல்ல மெல்ல அவர்களை ஏமாற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Crimestoppers வெளியிட்டுள்ள தகவலின்படி, 2024 ஆம் ஆண்டில் காதல் மோசடிகளால் £106 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 9% அதிகமாகும். உதாரணமாக இவ்வாறான மோசடியில் சிக்கிய நபர் ஒருவர் ஏறக்குறைய 11,222 பவுண்டுகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய நிதி நிறுவனத்தின் கூற்றின்படி, 38 சதவீதமானவர்கள் பணம் அனுப்புவது தொடர்பான கோரிக்கையை பெற்றதாகவும்,  அவர்களில் பலர்  1000 பவுண்ட்ஸிற்கு அதிமாக கொடுக்குமாறு அழுத்தத்தை எதிர்கொண்டதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

காதல் மோசடி என்பது அதிக ஆபத்துள்ள மோசடியாகவே உள்ளது. இது நிதி ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் இலக்கு வைக்கப்பட்டவர்களை பாதிக்கிறது.

மேலும் காதல் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளை சந்திப்பதுடன் சில சமயங்களில் நீங்கள் காதலிக்கும் குறித்த நபர் ஆபத்தானவராக கூட இருக்கலாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்