லண்டனில் திடீரென கடமைகளில் இருந்து விலகிய பொலிஸார்
கொலைக் குற்றச்சாட்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது சுமத்தப்பட்ட காரணத்தினால், லண்டன் நகரிலுள்ள பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆயுதம் ஏந்திய கடமைகளில் இருந்து திடீரென விலகியுள்ளனர்.
24 வயதுடைய ஆயுதம் ஏந்தாத கிரிஸ் கபா எனும் நபரை கடந்த வருடம் தென் லண்டன் பகுதியில் வைத்து மெற்றோ பொலிட்டன் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொன்றார்.
இதுவிடயம் குறித்த விசாரணை கடந்த வாரம் மீண்டும் விவாத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவ்வாறான கொலை குற்றச்சாட்டுக்கள் எவ்வாறு முன்வைக்கப்படுகின்றன என்பது குறித்து மெற்றோ பொலிட்டன் பொலிஸார் கவலை அடைவதாக அந்தப் பொலிஸ் பிரிவின் அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆயுதம் ஏந்தாவராக இருந்தாலும் குற்றமிழைத்தவராக இருக்கும்பட்சத்தில்ரூபவ் அந்த குற்றச்செயலை கட்டுப்படுத்த முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை என்னவென்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
குற்றங்கள் பாரதூரமான குற்றங்களாக அமையும் பொழுது அவை பொது மக்களுக்கு உயிராபத்து உட்பட பல்வேறு பாதிப்புக்களையும் ஏற்படுத்துகிறது என்று பொலிஸார் தெரிவித்தனர்.