இலங்கை தேவாலயங்களில் பொலிஸார் குவிப்பு!
உலக வாழ் கிறிஸ்துவ மக்கள் இன்று (25.12) நத்தார் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் பல தேவாலயங்களில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இலங்கையில் உள்ள தேவாலயங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதுமானதாக இல்லாவிட்டால் 011 247 27 57 என்ற விசேட இலக்கத்தின் ஊடாக பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவிக்க முடியும் என பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாடு முழுவதும் உள்ள 2,300க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, 7,500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.