இலங்கை தர்கா நகரில் சந்தேக நபரை கைது செய்ய போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு
இலங்கையில் பிரபல சிங்கள பத்திரிக்கையொன்றின் செய்தியின்படி, இரும்பு கம்பியால் அதிகாரிகளைத் தாக்க முயன்றதாகக் கூறப்படும் சந்தேக நபரைக் கட்டுப்படுத்த, அதிகாரி ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக அளுத்கம போலீசார் தெரிவித்தனர் .
தர்கா டவுன் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு குறித்து 119 என்ற எண்ணுக்கு வந்த தகவலை அடுத்து, போலீசார் அங்கு சென்றபோது, சந்தேக நபர் அவர்களை தடியால் தாக்க முயன்றதாகவும், இதனால் ஒரு அதிகாரி துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதாகவும் கூறப்படுகிறது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டு காவலில் எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





