இலங்கை

பௌத்த பிக்குவால் கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

தெனியாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேகம பிரதேசத்தில் வியாழன் (16) பௌத்த பிக்கு ஒருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் காயங்களுக்கு உள்ளாகி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெனியாய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று வியாழக்கிழமை தனது தனிப்பட்ட மோட்டார் சைக்கிளில் வேலைக்காக சென்று கொண்டிருந்த போது பல்லேகம, கங்கொட வீதியில் உள்ள சம்போதி முதியோர் இல்லத்திற்கு அருகில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலின் போது கட்டுவன பிரதேசத்தில் வசிக்கும் நபர் படுகாயமடைந்து தெனியாய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரியான 37 வயதுடைய திருமணமானவர், இந்தத் தாக்குதலை நடத்திய பதின்ம வயது பிக்குவின் 26 வயதுடைய சகோதரியுடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபட்டிருந்தமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

வியாழன் (16) காலை துறவி, பொலிஸ் கான்ஸ்டபிளை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும், சந்தேகநபர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இருவரும் சம்பவம் நடந்த இடத்தில் சந்தித்ததாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, 17 வயதுடைய பிக்கு, தனது பையினுள் மறைத்து வைத்திருந்த கத்தியால் உயிரிழந்த பொலிஸாரின் கழுத்தில் குத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் தெனியாய பொலிஸ் அதிகாரிகளால் சந்தேகத்திற்குரிய பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!