இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு போதைபொருள் விநியோகித்த இருவரை கைது செய்த பொலிஸார்

அம்பாறையில் நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களிற்கு போதைப்பொருட்களை விநியோகித்து வந்த சந்தேகநபர்கள் இருவருடமிருந்து ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கல்முனை விசேட அதிரடிப் படையினரால், 20 மற்றும் 19 வயதுடைய மருதமுனை பகுதியை சேர்ந்த இவர்கள் நேற்று இரவு ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் வசமிருந்து மொத்தமாக 2,460 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.
அத்துடன், கைதான சந்தேகநபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்
(Visited 12 times, 1 visits today)